Skip to playerSkip to main content
  • 5 months ago
வேலூர்: புளிய மர பட்டைகளை சட்ட விரோதமாக ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற இருவரை வனத்துறையினர் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர்.ஆந்திர - தமிழக எல்லை பகுதியான மோர்தானா வனப்பகுதியில் சிலர் சட்ட விரோதமாக நடமாடுவதாக குடியாத்தம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் உள்ள புளிய மரங்களில் இருந்து பட்டைகளை எடுத்து, ஆந்திர பதிவு எண் கொண்ட ஒரு ஆட்டோவில் ஏற்றிய இருவரை பிடித்த போலீசார், அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் பலமனேர் பகுதியைச் சேர்ந்த மதன் (27) மற்றும் வெங்கைய்யா (27) என தெரியவந்தது.மேலும், அவர்கள் சுண்ணாம்பு காய்ச்சும் பணிக்காக புளிய மர பட்டையை ஆந்திராவுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் வனத்துறையினரிடம் கூறினர். இதையடுத்து, புளியம்பட்டையும் பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், இருவருக்கும் ரூ.25,000 அபராதம் விதித்தனர். 

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended

ETVBHARAT
19 minutes ago