அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட வேப்பமரம், புங்கமரம் உள்ளிட்ட நாட்டு இன மரங்கள் வளர்ந்திருந்தன. இந்த மரங்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூத்த செவிலியராக பணியாற்றும் ருக்குமணி (53) என்பவர் வாரியங்காவல் பகுதியில் உள்ள நாகமுத்து என்ற மர வியாபாரியிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாகமுத்து மரங்களை வெட்டி வண்டியில் ஏற்ற முயற்சித்துள்ளார். அப்போது இது குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் மரங்களை ஏன் வெட்டினீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு செவிலியர் ருக்குமணி சரியாக முறையில் பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் அளித்துள்ளதாகவும், விரைந்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Be the first to comment