Skip to playerSkip to main content
  • 2 weeks ago
திருவண்ணாமலை: மார்கழி மாத பிரதோஷ தினத்தையொட்டி அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில். இங்குள்ள பெரிய நந்திக்கு மார்கழி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள், அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.  அதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.பிரதோஷ தினத்தின் போது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும் என்றும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புவதால் பிரதோஷத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Category

🗞
News
Transcript
00:00Music
00:10Music
00:14Music
00:24Music
Be the first to comment
Add your comment

Recommended