பிக் பாஸ் தமிழ் 12 வாரங்கள் முடிந்து, 13 வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. 12 வது வாரத்தில் மொத்தம் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டார்கள். இதில் ரசிகர்களுக்கே மிகவும் ஷாக் கொடுத்த எலிமினேஷன் என்றால் அது கனி திருவின் எலிமினேஷன் தான். இவர் கடைசி வரை வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 84 வது நாளில் எலிமினேட் செய்யப்பட்டார். எலிமினேட் ஆன கனி திருவை வரவேற்க, அவரது சகோதரியும் நடிகையுமான விஜி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Be the first to comment