காஞ்சிபுரம்: 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெற்றிக்காக காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் த.வெ.க.நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு செய்தனர்.தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தற்போது தனது திரைப்பயணத்தின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும், வசூல் சாதனை படைத்து வரும் விஜய், அரசியலில் முழு வீச்சில் ஈடுபடும் நோக்கில் இந்த திரைப்படமே தனது கடைசிப் படம் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அரசியலில் அவர் எடுத்து வைக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்தச் சூழலில், 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் (ஜன 9) ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் எஸ்.கே.பி. தென்னரசு தலைமையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் திரளாகக் கூடி சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
Be the first to comment